அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விவேகம் வசூல் மழையை பொழிகிறது,

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான விவேகம் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற போதிலும் வசூலில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. தல அஜித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

வெளியான ஆறு நாட்களில் சென்னையில் மட்டும் இதுவரை ரூ.6.75 கோடி வரை வசூல் படைத்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 15-வது இடத்தில் இருந்த விவேகம் தற்போது 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து தல நடிக்கும் 58-வது படத்தையும் சிவா இயக்கவுள்ளார் என்பது கொசுறு தகவல்.