Asianet News TamilAsianet News Tamil

’ஆஸ்கார்’ நாமினேஷன் பட்டியலில் ஒரு கோவைத் தமிழனின் குறும்படம்...

பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கோயமுத்தூர் தமிழரும், சமூக செயல்பாட்டாளருமான அருணாச்சலம் முருகானந்தம் நடித்த குறும்படம் ஒன்று நாமினேஷன் பிரிவில் தேர்வாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

period of sentence at oscar nominations
Author
Chennai, First Published Jan 23, 2019, 1:36 PM IST

பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கோயமுத்தூர் தமிழரும், சமூக செயல்பாட்டாளருமான அருணாச்சலம் முருகானந்தம் நடித்த குறும்படம் ஒன்று நாமினேஷன் பிரிவில் தேர்வாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.period of sentence at oscar nominations

2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. எனவே, இது சினிமா ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.

இந்நிலையில்தான், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் ஓடுகிறது.period of sentence at oscar nominations

விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தால் உந்தப்பட்டுதான் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் பேட் மேன் என்ற இந்திப்படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் பிப்ரவரியில் அப்படம் ரிலீஸாகியிருந்தது.

இந்நிலையில், பெண் சமூகத்துக்கு பெரும் தொண்டு செய்த ஒரு தமிழர் நடித்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெருமையை தேடி தந்துள்ளது. இறுதிச் சுற்றில் இப்படம் தேர்வு பெறுமா என்பதைத் தெரிந்துகொள்ள பிப்ரவரி 24 வரை காத்திருக்கவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios