பசங்க ஸ்ரீராம் ஹீரோவாக நடிக்கும், ஒரே இரவில் நடக்கும் திரில்லர் கதையான 'எக்ஸிட் ' பட டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

'பசங்க' திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து :கோலி சோடா' வில் பேசப்பட்டு 'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து அங்கீகாரம் பெற்றவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'எக்ஸிட்' இது ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.

இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி .உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார்.ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

Priyanka Deshpande: கணவரை பிரிந்தார் பிரியங்கா! விரைவில் இரண்டாவது திருமணம்? அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!

கதாநாயகன் ஸ்ரீராம் எப்போதும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நடிப்பாற்றலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அவரையே நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த விஷாக் நாயர் இதில் ஒரு மிருகமாகவே மாறி நடித்துள்ளார் .

'ஜெயிலர்' படத்தில் வரும் விநாயகன் போல,பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு
மிருக குணத்தை மட்டும் தான் காட்டுவார்கள். இப்படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மாறி, ஒரு மிருகத்தைப் போல நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார். ஆனால் உணர்ச்சிகள் காட்டுவார். மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.

பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய சீரியல் 'நினைத்தேன் வந்தாய்.'! மாற்றப்படும் ஜீ தமிழ் தொடர்களின் நேரம்!

இவர்கள் தவிர ,ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி,வைஷாக் விஜயன்,ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குத் அனீஷ் ஜனார்தன், ஷாஹீன், ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ரியாஸ் நிஜாமுதீன் ஒளிப்பதிவு செய்ய, நிஷாத் யூசுப் [படத்தொகுப்பு செய்துள்ளார், தனுஷ் ஹரிகுமார், மற்றும் விமல்ஜித் விஜயன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

முழுக்க முழுக்க சீரியஸான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தை, பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துளளனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
EXIT PROMO TEASER | Tamil | Sreeraam | Vishak Nair | Shaheen | Venu Gopalakrishnan