MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்

Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்

Actor Indrans Interview : பொதுவெளியில் ரொம்ப பணிவா இருக்கிறது நடிப்பு-னு சிலர் விமர்சனம் செய்தது குறித்து கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ், பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 01 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karuppu Movie Actor Indrans
Image Credit : Think Music India

Karuppu Movie Actor Indrans

மலையாள சினிமாவுல ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்னா அது இந்திரன்ஸ்தான். காஸ்ட்யூம் டிசைனரா சினிமாவுக்குள்ள வந்து, அப்புறம் காமெடியனா எல்லாரையும் சிரிக்க வச்சார். ஆனா, பாடி ஷேமிங் செய்யப்படுற காமெடி கதாபாத்திரங்களுக்கு அடுத்ததாக அவருக்குள்ள ஒரு சிறந்த நடிகர் இருக்கிறதை மலையாள சினிமா ரொம்ப லேட்டாதான் கண்டுபிடிச்சது. மிதுன் மானுவல் தாமஸ் டைரக்சன்ல வந்த 'அஞ்சாம் பாதிரா' படத்துல 'ரிப்பர் ரவி' கேரக்டர்ல மிரட்டியிருந்தார். அதேபோல, 'வெயில்மரங்கள்', 'ஹோம்', 'மாலிக்', 'பறவ', 'உடல்', 'ஆடு' சீரிஸ்னு பல படங்கள்ல அவரோட நடிப்பு சூப்பரா பேசப்பட்டுச்சு. இப்போ, சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி சேர்ந்து நடிச்ச 'கருப்பன்' படத்துல இந்திரன்ஸோட நடிப்புக்கு தமிழ்லேயும் பெரிய பாராட்டு கிடைச்சிட்டு இருக்கு. இந்தப் படத்துல மட்டஞ்சேரி சுகுமாரன் என்ற கேரக்டர்ல அவர் நடிச்சிருக்கார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திரன்ஸ் திரைப்பயணம்
Image Credit : youtube

இந்திரன்ஸ் திரைப்பயணம்

பொது நிகழ்ச்சிகள்ல ஒரு சினிமா ஸ்டார்ங்கிற எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப இயல்பா இந்திரன்ஸ் நடந்துக்கிற வீடியோக்கள் அடிக்கடி சோஷியல் மீடியாவுல வைரலாகும். 'இவ்வளவு பெரிய நடிகரா இருந்தும், இவ்வளவு பணிவா ஒருத்தரை சினிமா இண்டஸ்ட்ரியில பார்க்கவே முடியாது'னு அந்த வீடியோக்கள் கீழ நிறைய கமெண்ட்ஸ் வரும். ஆனா, சில சமயம் இந்திரன்ஸோட இந்த அதீத பணிவு ஒரு நடிப்பு-னும் விமர்சனங்கள் வர்றதுண்டு. இப்போ அந்த விமர்சனங்களுக்கு இந்திரன்ஸே பதில் சொல்லியிருக்காரு.

34
இந்திரன்ஸின் தாழ்வுமனப்பான்மை
Image Credit : Facebook/ Indrans

இந்திரன்ஸின் தாழ்வுமனப்பான்மை

ஒருவேளை தன்னோட பணிவு ஆரம்பத்துல நடிப்பாகக் கூட இருந்திருக்கலாம்னு இந்திரன்ஸ் சொல்றாரு. 'அன்னிக்கி என் தோற்றம் சினிமாவுக்கு ஏத்த மாதிரி இல்லை. அதனால, நண்பர்கள் எல்லாம் முன்னாடி நில்லு-னு சொல்லி இழுத்து விடுவாங்க, ஆனா என் கால் தானா பின்னாடி போயிடும். இப்போ அந்தப் பணிவு வாழ்க்கையோட ஒரு பகுதியாவே மாறிடுச்சு'னு அவர் சொல்லியிருக்காரு.

"ஆமா, இருக்கலாம். அது எனக்குப் பழகிப்போச்சு. ஒருவேளை நான் நடிச்சிருக்கலாம். என்னைப் பற்றி தெரியாத ஒருத்தர், என் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அப்படி கேட்கிறதுல நியாயம் இருக்கு. அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. இன்னைக்கு என் உருவத்துக்கு சினிமா மாதிரி ஒரு பெரிய இடத்துல நிக்கிற தகுதியே இல்லை. ஒரு வீட்டுக்குள்ள 'நான் வரலாமா?'னு கேட்டுட்டு தயங்கி நிக்கிற மாதிரிதான் என் நிலைமை இருந்துச்சு. அப்போ, ரொம்ப குனிஞ்சு, பணிஞ்சு இருந்ததுனால இந்த பழக்கம் வந்திருக்கலாம். படியில கொஞ்சம் ஏறி உக்காந்து, அப்புறம் கொஞ்சம் நகர்ந்து உக்காந்து, அப்படி இப்படின்னுதான் சினிமாவுக்குள்ளேயே நுழைஞ்சேன்.

44
மாத்திக்க முடியல
Image Credit : narr8ive

மாத்திக்க முடியல

அன்னைக்கு அது ஒரு நடிப்பாகக் கூட இருந்திருக்கலாம். ஒரு பொய்யாகக் கூட இருந்திருக்கலாம். ஆனா, இப்போ அது என் வாழ்க்கையோட ஒரு பகுதியாகவே மாறிடுச்சு. நண்பர்கள் எல்லாம் 'முன்னாடி வாடா'னு சொல்லி இழுத்து நிறுத்தினாலும், என் கால்கள் தானாகவே பின்னோக்கிப் போயிடும். நான் எவ்வளவு முயற்சி பண்ணியும் அதை மாத்திக்க முடியல," என்று இந்திரன்ஸ் சொல்லியிருக்காரு. 'கேன் மீடியா'வுக்கு கொடுத்த ஒரு பேட்டியிலதான் அவர் இப்படிப் பேசியிருக்காரு.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Related Stories
Recommended image1
Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Recommended image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved