- Home
- Cinema
- Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Karuppu Movie Actor Indrans : கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளார் இந்திரன்ஸ். அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Who is Indrans?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்புதிரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. கருப்பு படத்தை பார்த்த பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அப்படத்தில் சூர்யாவையே மிஞ்சும் அளவுக்கு ஒருவர் நடித்திருக்கிறார். அவரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
அவர் பெயர் இந்திரன்ஸ். சொல்லப்போனால் கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி முழுக்க சூர்யாவை விட அதிக ஸ்கிரீன் பிரசன்ஸ் இருந்தது இந்திரன்ஸுக்கு தான். மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வரும் இந்திரன்ஸுக்கு இப்படத்திலும் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதனால் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ

இந்திரன்ஸ் நடிப்புக்கு தீனிபோட்ட கருப்பு
நகையை தொலைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் திருடர்களிடம் கெஞ்சும் காட்சியாகட்டும், சோகமாக இருக்கும் தன் மகளை விஜய் டயலாக் சொல்லி தெம்பூட்டுவதாகட்டும், தன் மகள் இறந்த பிறகு கோர்ட் வளாகத்தில் தங்க நகைகளை வக்கீல்கள் மீது தூக்கியெறிந்து தன் ஆதங்கத்தை கொட்டும் காட்சிகளாகட்டும், ஒவ்வொரு சீனிலும் யார்ரா இந்த மனுஷன் என சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார். சொல்லப்போனால் கருப்பு படத்தின் முதல் பாதியை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றதே இந்திரன்ஸ் தான்.
யார் இந்த இந்திரன்ஸ்?
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அவருடைய கதை மிகவும் சுவாரஸ்யமானது. அவர் சினிமாவுக்கு வரும் முன் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்ததால், அமேச்சர் ஆர்ட் கிளப்பில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை படிப்படியாக வளர்த்திருக்கிறார். அதன்பின்னர் கடந்த 1981-ம் ஆண்டு வெளிவந்த சூதாட்டம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த முன்ரோதுருத் படம் தான் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திரன்ஸ் வென்ற விருதுகள்
2018-ல் 'ஆளொருக்கம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதை வென்றார். 2019-ல் 'வெயில்மரங்கள்' படத்துக்காக சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெற்றார். கடந்த ஆண்டு 'ஹோம்' படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
திருவனந்தபுரம் குமாரபுரம் பள்ளியில்தான் அவர் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். இந்திரன்ஸின் முக்கிய இலக்கு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதுதான். ஆனால், 'சாக்ஷரதா மிஷன்' விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுத 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் அண்மையில் அவர் 7ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.
பள்ளி படிப்பை தொடரும் இந்திரன்ஸ்
சமீபத்தில் நடந்த 'நவகேரளசதாஸ்' நிகழ்ச்சியின்போது, தனது மேற்படிப்பு ஆசையை இந்திரன்ஸ் வெளிப்படுத்தினார். அப்போது 10-ம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்பத்தையும் கொடுத்தார். முதலில் தனக்கு 4-ம் வகுப்பு வரைதான் படித்ததாக ஞாபகம் இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், சாக்ஷரதா மிஷன் அதிகாரிகள், அவருடைய பழைய பள்ளி நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் 7-ம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றது தெரியவந்தது.
பள்ளிக்குச் செல்ல புத்தகங்கள், உடைகள் கூட இல்லாத வறுமைச் சூழலால், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தையல் வேலைக்குச் சென்றதாக இந்திரன்ஸ் முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனாலும், வாசிப்புப் பழக்கத்தை மட்டும் அவர் கைவிடவில்லை. அதுவே பல விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவியதாகவும், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

