- Home
- Cinema
- Karuppu Box Office Day 1 : முதல் நாளே வசூல் வேட்டையாடிய கருப்பு... அடேங்கப்பா இத்தனை கோடியா?
Karuppu Box Office Day 1 : முதல் நாளே வசூல் வேட்டையாடிய கருப்பு... அடேங்கப்பா இத்தனை கோடியா?
Karuppu Box Office : சூர்யா, திரிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கருப்பு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

karuppu box office collection worldwide
நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவர்கள் இருவரும் 21 ஆண்டுகளுக்கு பின் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளார். அப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் மே 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ

தாமதமாக ரிலீஸ் ஆன கருப்பு
கருப்பு திரைப்படத்தை மே 14ந் தேதியே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்காக பைனான்சியர் கருப்பு படத்திற்கு என்.ஓ.சி வழங்க மறுத்ததால், அப்படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. இதன்பின்னர் நடிகர் சூர்யா உள்பட ஏராளமானோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கிடைத்தது. நடிகர் சூர்யா கிட்டத்தட்ட ரூ.30 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு நாள் தாமதமாக அதாவது மே 15ந் தேதி தான் கருப்பு திரைப்படம் திரைக்கு வந்தது.
கருப்பு ரெஸ்பான்ஸ்
கருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பக்கா விருந்தாக இருந்தது. சூர்யாவை மீண்டும் கமர்ஷியல் ஹீரோவாக இப்படம் மீட்டு கொண்டுவந்துள்ளது என்றே சொல்லலாம். படத்தில் ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்திலும் தூள் கிளப்பி இருக்கிறார் சூர்யா. அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் பேபி கண்ணன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். இதுதவிர சூர்யா, வேல ராமமூர்த்தி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், தீபா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் அது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
கருப்பு வசூல்
கருப்பு திரைப்படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. அதன்படி அப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.20.66 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல் நாளே அதிக வசூலை வாரிசுருட்டிய திரைப்படம் என்கிற மாபெரும் சாதனையை கருப்பு படைத்துள்ளது. அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்யும் தமிழ் திரைப்படமாக கருப்பு மாற வாய்ப்பு உள்ளது.
சூர்யாவின் கம்பேக்
கருப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது சாய் அபயங்கரின் இசை தான். அது பல காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கருப்பு திரைப்படத்தின் வசூல் மேலும் பிக் அப் ஆக வாய்ப்பு உள்ளது. அநேகமாக இந்த வீக் எண்ட் கருப்பு படம் 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவிற்கு இது மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

