Asianet News TamilAsianet News Tamil

ஐஸ்வர்யாவுக்கு எப்படி ஐஸ் வைப்பது. அரங்கத்தை சிரிப்பால் அதிர வைத்த பார்த்திபன்

மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று பேசியுள்ளார் பார்த்திபன் .

parthiban speech about aishwarya bachchan at the Ponniyin Selvan Audio Launch
Author
First Published Sep 7, 2022, 10:02 AM IST

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தென்னிந்தியா முழுவதும் பிரபலம். பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்து வரும் இவர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக ஜொலித்து வருகிறார். தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை பெற்றுவிட்டார். அதோடு இந்த படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் நாயகி. இதைத்தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்தினம் விக்ரம் கூட்டணிகள் பிளாக்பஸ்டராக அமைந்த ராவணன், சங்கர் ரஜினியின் கூட்டணிகள் மாஸ் காட்டிய எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெறும் நான்கு படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நந்தினி, மந்தாகினி தேவி என இரு வேறு  கதாபாத்திரங்களில் வரும் இவரை காண ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. முன்னதாக இவர் குறித்தான போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. 

மேலும் செய்திகளுக்கு... நாயகர்கள் காலில் விழ..நாயகிகளை கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்...ஐஸ்ஸ பார்த்து உருகிய ரஜினிகாந்தின் க்யூட் மூமென்ட்

parthiban speech about aishwarya bachchan at the Ponniyin Selvan Audio Launch

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டிற்கு வருகை தந்திருந்த ஐஸ்வர்யா ராய் பச்சனை நீண்ட நாள் கழித்து கண்ட  ரசிகர்கள் உற்சாக கூச்சல் இட்டனர். பின்னர் பிரமாண்ட மேடைக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராய் பச்சனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்திருந்த வீடியோவும் வைரலானது.

மேலும் செய்திகளுக்கு... எதை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு... பொன்னியின்செல்வன் விழாவில் இயக்குனரை கலாய்த்த ரஜினிகாந்த்

தற்போது இவர் குறித்து பிரபல நடிகர் பார்த்திபன் பேசி இருப்பதும் ட்ரெண்டாகி வருகிறது. படத்தில் ஒரு பகுதியாக நடித்துள்ள பார்த்திபன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய போது, ஹிந்தி தெரியாது என ஹிந்தியிலேயே கூறி கலகலப்பை ஏற்படுத்தி இருந்தார். அதோடு உயிர் தமிழ் ஞானமே என தனக்கே உரிய சூப்பர் கூல் ஸ்டைலில் அழகாக பேசிய இவர், கல்கி கனவை கலக்கி இருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்திருக்கிறேன். மணிரத்தினத்தின் லவ் இல்லாமல் இவ்வளவு அழகாக நடிக்க முடியாது. நடிக்கத் தெரியாதவர்களை கூட நடிக்க வைத்து விடுவார் மணிரத்தினம் என புகழாரம் சூட்டியுள்ளார்.

parthiban speech about aishwarya bachchan at the Ponniyin Selvan Audio Launch

மேலும் பேசிய அவர்,  எல்லோருக்கும் ஐஸ் வெச்சாச்சு ஐஸ்வர்யாவுக்கு என்ன வைப்பது... மொழியே தெரியாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் அவரின் நடிப்பை பார்த்து பிரமிப்படைத்தேன் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. இயக்குநர் ஷங்கரின் புகழாரம்!

பொன்னியின் செல்வனில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கல்கியில் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  பிரமிப்பை ஏற்படுத்தும் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டீசர், பாடல் மற்றும் டிரைலர் உள்ளிட்டவை தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. இதன் மூலம் படத்தின் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios