இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர் முதல் பான் இந்தியா இயக்குனர் மணிரத்தினம் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்

பிரபல இயக்குனரின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் தற்போது நனவாகியுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் சோழ வம்சாவளிகளாக மாறி உள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கும் பொன்னியின் செல்வனின் ட்ரெய்லர் விழா நேற்று நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமலஹாசன், ரஜினிகாந்த், பார்த்திபன், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பிரபலங்களின் பேச்சுக்கள் வைரல் ஆகி வருகிறது. அதோடு சமூக வலைதளத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ட்ரைலர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கமலின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் இந்த ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...அண்ணணா பொறந்துட்டு நான் படுறபாடு இருக்கே..! எமோஷனலான கார்த்தியை ஒரே டுவிட்டில் நோஸ்கட் பண்ணிய சூர்யா

Scroll to load tweet…

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாள் முன்னதாக வெளியான பாடல்களும் டீசரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மன் கலைக்கு தோட்டா தரணியென டெக்னிகல் டீமும் மிக ஸ்ட்ராங்காக இருப்பதும் முந்தைய வெளியீடுகள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பும் படத்திற்கான உச்சகட்ட ஆர்வத்தை தூண்டி உள்ளது. அதோடு இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பொன்னியின் செல்வன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கமலின் கம்பீரக் குரலில் பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன் வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... காதல் கிசுகிசுக்கு மத்தியில்... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ஜோடியாக வந்த சித்தார்த் - அதிதி ராவ்

இந்நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குனர் சங்கர் முதல் பான் இந்தியா இயக்குனர் மணிரத்தினம் தான் என புகழாரம் சூட்டியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹாலிவூட் என கலக்கி வருபவர் மணிரத்தின் என்பது குறிப்பிடத்தக்கது.