Ponniyin selvan : மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் எடுக்க விரும்பிய படம் பொன்னியின் செல்வன். பலரின் கனவாக இருந்த இந்த படைப்பை ஒருவழியாக நினைவாக்கி உள்ளார் மணிரத்னம். இவரும் இதனை எடுக்க பலமுறை முயன்றிருக்கிறார். தற்போது தான் அது திரை வடிவம் கண்டுள்ளது. 

மணிரத்னத்தின் இந்த கனவுப் படத்துக்கு உயிர்கொடுத்துள்ளது கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தான். இப்படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதற்கு முக்கிய காரணம் லைகா நிறுவனம் தான். அந்நிறுவனம் தான் இப்படத்தை பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்க உதவியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவுக்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டா தரணி என பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமை பயன்படுத்தி இருக்கிறார் மணிரத்னம். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இதில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். கமலின் கம்பீரக் குரலில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிரெய்லரில் வரும் பிரம்மாண்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளன.

Ponniyin Selvan Trailer | #PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Subaskaran | Madras Talkies | Lyca

இதையும் படியுங்கள்... காதல் கிசுகிசுக்கு மத்தியில்... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ஜோடியாக வந்த சித்தார்த் - அதிதி ராவ்