ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இரவின் நிழல்.. பிரம்மிப்பூட்டும் டீசர் - ‘ஆஸ்கர்’ கன்பார்ம் என பாராட்டும் ரசிகர்கள்

Iravin Nizhal Teaser : இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். 

Parthiban single shot film iravin nizhal teaser released

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வித்தகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் உலக அளவில் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தை இயக்கியதோடு அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கிறார். பார்த்திபன் தான் அப்படத்தையும் இயக்கி உள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Parthiban single shot film iravin nizhal teaser released

இதுதவிர பார்த்திபன் இயக்கத்தில் மற்றுமொரு புதுப்படமும் உருவாகி வந்தது. இரவின் நிழல் என பெயரிடப்பட்டுள்ள அப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதன் டீசரைப் பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிரபல நிகழ்ச்சியின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்கும் சுந்தர் சி... எல்லாத்துக்கும் அவங்க தான் காரணமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios