நல்ல விசயத்திற்கு அஜித் போன் நம்பர் கேட்டாங்க, நான் தான் கொடுத்தேன்: நடிகர் பார்த்திபன்!

Parthiban Says that I Gave the Ajith Kumar Phone Number : நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் பத்மபூஷன் விருது வென்ற அஜித் குமாருக்கு வாழத்து தெரிவித்துள்ளார்.

Parthiban Says that I Gave the Ajith Kumar Phone Number for Padma Bhushan Award rsk

Parthiban Says that I Gave the Ajith Kumar Phone Number : பிறந்த 2025 புத்தாண்டு யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால், துபாய கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். இப்போது, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறென்ன வேண்டும். எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்த அஜித்திற்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்று எதுவும் இல்லை.

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் ஒருவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்மபூஷன் அஜித் குமார் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

அஜித் பக்கம் போகஸை திருப்பிய அரசியல் கட்சிகள்; சைலண்ட் மோடில் விஜய்!

நண்பர் அஜித் குமாரின் எண் கேட்க,’ஏன்? என்று கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன். ஒருவழியாக அவரின் PRO சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜித் கழுத்துக்கு மாலை என்பது மீறி, தலைக்கு வைர கிரீடம் ஆனது என்று பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Congratulations

PADMABHUSHAN AJITH KUMAR!!! என்று பதிவிட்டுள்ளார். அஜித் மற்றும் பார்த்திபன் இருவரும் இணைந்து நீ வருவாய் என என்ற படத்தில் நடித்துள்ளனர். உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தில் அஜித் நடிக்க, பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்

அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக இந்த 2025ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லி என்ற படத்திலும் அஜித் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் இத்தனை பேரா?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios