parthiban blame in politicians
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் '6 அத்தியாயம்' திரைப்படம்.
பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’

ஒரு திரைப்படத்தில் இடம்பெறவுள்ளது. முதல் முறையாக உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை 'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன். அனைவருக்கும் மழை வணக்கம் என்று அவருடைய பாணியில் சற்று வித்தியாசமாகவே அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின் மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.0 ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்தக் கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவைப் பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும் என்று வாழ்த்துக்களை கூறி சந்தடி சாக்கில் மத்திய அரசையும் தமிழக அரசையும் கிண்டல் செய்துவிட்டு போய்விட்டார்.
