“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் விஜே சித்ரா. ஊடகவியலாளராக வாழ்க்கையை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி விஜய் தொலைக்காட்சியில் டி.ஆர்.பி. ஹிட்டான சீரியலில் வெற்றி வாகை சூடி வந்த சித்ரா, இரு தினங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சித்ராவை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமந்தும் அப்போது அவருடன் தான் தங்கியிருந்தார். இதனால் ஒட்டுமொத்த சந்தேக பார்வையும் அவர் மீது திரும்பியது, சித்ராவின் பெற்றோர்களும் ஹேமந்த் மீதே குற்றச்சாட்டினர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: குழந்தை முதல் குமரி வரை மாறாத புன்னகையுடன் விஜே சித்ரா... யாரும் அதிகம் பார்த்திடாத புகைப்படங்கள்....!

சித்ராவின் மரணத்தை இந்த நொடி வரை ஆயிரக்கணக்கான ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்கள் நம்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ரா தனது குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிட்டது என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் தான். எனவே சித்ராவை இழந்த சோகம் சக நடிகர், நடிகைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க:  நடிகை மீனா பொண்ணு நைனிகாவா இது?... ‘தெறி’ பேபி இப்ப நெடு நெடுன்னு வளர்ந்துட்டாங்களே...!

இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் விஜே சித்ராவின் புகைப்படத்திற்கு ஓட்டுமொத்த நடிகர், நடிகைகளும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். சித்துவின் போட்டோவிற்கு முன்பு நின்று, “உறவுகளாய் நாங்கள் இருக்க ஏன் கடவுளை தேடி பறந்தாய்” என உருக்கமாக சுஜித்ரா கவிதை வாசிக்க சக நடிகர், நடிகைகள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி, குலுங்கி அழும் காட்சிகள் காண்போரின் மனதை உருக்கிறது. இதோ அந்த வீடியோ...

"