தூக்கத்தில் இருந்து எப்போது தான் விழிப்பீர்கள்? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோவால் திமுகவுக்கு தலைவலி
மதுரையில் கஞ்சா போதை கும்பல் தாக்கி இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தூக்கத்தில் இருந்து எப்போது விழித்துக் கொள்வீர்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போதைப் பொருள் நடமாட்டத்தின் விலைவாக நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த பாரதிநகர் பகுதியில் நேற்று இரவு கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரவு பணியை முடித்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த போதை இளைஞர் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
சேலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரழப்பு; இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
இதனால் அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், அவரை சூழ்ந்து கொண்ட போதை ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பின்னர் அவ்வழியாக வந்த சிலர் போதை இளைஞர்களை துரத்தி வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
VAO Suicide: திருமணமாகாத விரக்தியில் VAO தற்கொலை? கோவையில் பரபரப்பு
இந்நிலையில், தாக்குதல் வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மிகவும் எளிதாக பொதுமக்களுக்கு கிடைப்பதாகவும், இதனால் அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களில் இது 4வது குற்ற சம்பவமாக பதிவாகி உள்ளது. உறக்கத்தில் உள்ள முதல்வர் எப்போது தான் விழித்துக் கொள்வார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.