Pandian Stores 2 Today Episode in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 509ஆவது எபிசோடில் தங்கமயில் குடும்பத்தினர் நேராக சரவணன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Pandian Stores 2 Today Episode in Tamil : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை சரவணனிடம் கூறுவது போன்றும் அதற்கு சரவணன் இன்னும் எத்தனை பொய் சொல்வீங்க என்று கேட்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய 509ஆவது எபிசோடில் பாக்கியம் ஒரு பிளான் போட்டுள்ளார். அதன்படி தங்கமயிலை அழைத்துக் கொண்டு நேராக பாண்டியன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
கோமதியிடம் விஷயத்தை சொன்ன பாக்கியம்
வரும் போதே இனிப்பு உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளார். மேலும், கோமதியிடம் முதலில் விஷத்தை சொல்லவில்லை. அப்படி இப்பை என்று இழுத்தடித்து கடைசியில் விஷயத்திற்கு வந்தார். அதில், ராஜீயிடம் நீ சித்தி என்றார். தொடர்ந்து என்னுடைய மகள் மூலமாக இந்த வீட்டிற்கு ஒரு வாரிசு வரப் போகிறது என்றார். இதை கேட்ட கோமதிக்கு தலகால் புரியவில்லை. மேலும் பாயாசம் காய்ச்சி கொண்டு வர, அத பண்ணவா, இத பண்ணவா என்றெல்லாம் கேட்டார்.
பாண்டியனுக்கு போன் போட்ட கோமதி
அப்போது தான் முதலில் சம்பந்திக்கு போன் போடுங்க என்று சொல்லவும், அதன் பிறகு கடைக்கு போன் போட்டு முதலில் வீட்டிற்கு வாருங்கள் என்றார். தொடர்ந்து சரவணனை வர சொல்ல எல்லொருமே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அப்போதுதான் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தினார்கள்.
இதைக் கேட்ட பாண்டியன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார். மேலும், வீட்டிற்குள் உள்ள தொட்டிலை எடுத்து வை என்றார். இப்படியெல்லாம் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க சரவணனுக்கு மட்டும் நம்பிக்கையே இல்லை. ஏனென்றால் அவர்கள் அப்படி செய்திருந்தார்கள். அதோடு ஹோட்டல் வேலை, படிப்பு என்று சொன்னது எல்லாமே பொய் தான். இந்த சூழல் கர்ப்பமாக இருப்பதை மட்டும் எப்படி நம்ப முடியும்.
பிரக்னன்சி கிட்டை காண்பித்த தங்கமயில்:
அவர் நம்பவே இல்லை. பிறகு பிரக்னன்சி கிட்டை எடுத்து காண்பித்தார். அதிலுள்ள 2 கோடுகளை பார்த்தார். ஆனால், அதிலும் பொய் சொல்லியிருப்பார்கள் என்று சந்தேகம் அடைந்தார். இறுதியாக தங்கமயில் வருத்தப் பட்டு, வேதனைப்பட்டு கண்ணீர்மல்க இந்த வீட்டிற்கு வாரிசு வரப்போவதை உறுதியாக கூற அதன் பிறகு தான் அவருக்கு நம்பிக்கை வந்தது. இதைத்தொடர்ந்து மீனா மற்றும் செந்தில் ஆகியோரும் வீட்டிற்கு வந்து சரவணன் மற்றும் மயிலுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
