Asianet News TamilAsianet News Tamil

பத்மாவதி படத்துக்கு இத்தனை மாநிலங்களில் தடை போட்டாச்சு; எல்லாப் பக்கமும் கேட் போடுறாங்களே...

Padmavathi film is banned in all states All the sides are gotta ...
Padmavathi film is banned in all states All the sides are gotta ...
Author
First Published Nov 25, 2017, 10:24 AM IST


பத்மாவதி படத்துக்கு வெளியிட ஐந்து மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தணிக்கை குழுவும் இதுவரை சான்று அளிக்கவில்லையாம்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்மாவதி’.

இதை வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் பிராமணர்களின் எதிர்ப்பு கிளம்பின.

இந்த நிலையில் மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.  மேலும், தணிக்கைக் குழுவும் இந்தப் படத்திற்கு சான்றளிக்கவில்லை.

இதனால், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருந்த திரைப்படம், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரையிட அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பன்சாலி மற்றும் அவரது பத்மாவதி படக்குழுவினரை எங்கள் மாநிலத்தில் வரவேற்போம்" என்றும், "கருத்து சுதந்திரத்தை அழிக்க நினைக்கும் ஒரு அரசியல் கட்சியின் திட்டமிடப்பட்ட சதி" என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios