பிரபல பாடகி வாணி ஜெயராம் உட்பட 9 பேருக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிப்பு!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உட்பட 9 பேருக்கு, பத்ம பூஷன் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Bhushan award announcement for famous singer Vani Jayaram

1945  ஆம் ஆண்டு வேலூரில், கலைவாணி-யாக பிறந்து இன்று தன்னுடைய இனிமையான குரலால் வானுயர வளர்ந்து நிற்பவர் தான் இந்த வாணி ஜெயராம். இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றவர். வானொலியில், போடப்படும் பாடல்களை கேட்டு கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் சிறகடிக்க செய்தவர்.

இவரது கனவும் மெய்யாகி போனது. இதற்க்கு முக்கிய காரணம்... வாணி ஜெயராம் இசை மீது இவருக்கு இருந்த தீரா காதல் தான். ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னர் ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்ற பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம்.

வீர பாண்டிய கட்டபொம்மன் முதல்... துப்பாக்கி வரை! தேசப்பற்றை பறைசாற்றிய திரைப்படங்கள்..!

Padma Bhushan award announcement for famous singer Vani Jayaram

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழி பாடங்களை பாடி பிரபலமானார்.

'பல பெண்களின் வாழ்க்கை சமையலறையிலேயே கழிந்து விடுகிறது'- பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்!

குறிப்பாக வாணி ஜெயராம் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி படகிக்கான தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து தெலுங்கு பட பாடலுக்காகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழ் நாடு ஸ்டேட் விருது, குஜராத் ஸ்டேட் விருது, ஒடிசா ஸ்டேட் விருது, நந்தி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

Padma Bhushan award announcement for famous singer Vani Jayaram

இந்நிலையில் இவருக்கு, கலை, அறிவியல், தோழி ரீதியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இந்த விருது மொத்தம் 9 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios