Asianet News TamilAsianet News Tamil

நீங்க எடுத்தா சமூக படம்... நாங்க எடுத்தா சாதி படமா..? பா. ரஞ்சித்துக்கு எதிராக அஜித்தின் மச்சானை கம்பு சுற்றவிட்ட இயக்குநர்..!

சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது திரெளபதி. எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம் மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்.

Pa.Ranjith Director of Ajith's brother-in-law rounding up
Author
Tamil Nadu, First Published Jan 4, 2020, 5:01 PM IST

சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி எனவும் சொல்லி போஸ்டர் வெளியான போதே திரெளபதி பரபரப்பை கிளப்பப்போவது உறுதி எனமுடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி விட்டது.

Pa.Ranjith Director of Ajith's brother-in-law rounding up

 தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகும் முதல் படம் இதுவாகும். தனது முதல் படமான அட்டக்கத்தி படத்திலிருந்து மெட்ராஸ், கபாலி, காலா என தான் இயக்கிய படங்களில் ஒரு தலைசார்பான சமூகத்தை திணித்திருந்தார் பா.ரஞ்சித். அவர் சமூகத்தின் நிறமாக நீலம் கலரை வைத்து நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்கிற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தனது தயாரிப்பு மூலம் சாதியம் கலந்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களையும் தனக்கு கீழ் உதவியாளராக பணியாற்றியவர்களை இயக்க வைத்து சாதிய படங்களை வெளியிட்டார் இயக்குநரான பா.ரஞ்சித்.

Pa.Ranjith Director of Ajith's brother-in-law rounding up

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் வடமாவட்டங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை குறி வைத்து பா.ரஞ்சித் படங்களை இயக்கி வருவதாக பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் குற்றம்சாட்டி இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Pa.Ranjith Director of Ajith's brother-in-law rounding up

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது திரெளபதி. எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம் மீறி கைய வச்ச கைய வெட்டுவோம். "ஆண்ட சாதி, ஆண்ட சாதி " னு ஆயிரம் முறை சொல்லி , அதில் இருக்கும் தப்பை மட்டும் வெளிச்சம்போட்டு,எல்லாரையும் நோகடித்து, குற்ற உணர்ச்சி அடையச் செய்தால் அது புரட்சிப் படம். 

 

சமூகத்தில் இருக்கும் உண்மையான நாடகக் காதல் விஷயத்தை சொன்னால் அது சாதிப் படம். அவ்ளோதான் சார் போராலீஸ்!! என்றெல்லாம் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்

 

Follow Us:
Download App:
  • android
  • ios