அட்டகத்தி  படத்தில் இயக்குனராக அறிமுகம் கொடுத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித், முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தார்.

அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். இதனால் மிக குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கம் வாய்ப்பு இவரின் மூன்றாவது படமாக அமைந்தது.

கடந்த வருடம் வெளிவந்த படங்களில்  அதிக வசூல் சாதனை செய்தது இவர் இயக்கத்தில் வெளிவந்த  கபாலி படம்.

இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்துள்ளது, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 முடிந்ததும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் இவர் தயரிப்பாளராக அவதாரம்  எடுக்க போவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது, இந்த படத்தை 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் என்பவர் இயக்க உள்ளார்.

'பரியேறும் பெருமாள்' என்று பெயரிட பட்டுள்ள இந்த படத்தில், கிருமி படத்தில் நாயகனாக நடித்த கதிர் நாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்க உள்ளார்,  மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பதாக கூறப்படுகிறது.