களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் கிடைத்தாலும், அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஓவியாவிற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 

இதையும் படிங்க: சிம்புவிற்கு மறுபடியும் வாய்ப்பு தந்த ஹன்சிகா... மீண்டும் சேரும் சூப்பர் ஜோடி... இந்த முறையாவது அது நடக்குமா?

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கோபத்தை உருவாக்கியது. அதற்கு பதிலளிக்க மறுத்த ஓவியா, தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் சாராத நடிகர், நடிகைகளிடம் ஊடகங்கள் அரசியல் குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டார். அந்த பதிவில் கமெண்ட் செய்த ஓவியா ரசிகர் ஒருவர், நீங்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பியுங்கள் என கொளுத்திப் போட்டார். 

அரசியல் கேள்விகளையே தவிர்த்த ஓவியா, இதற்கெல்லாம் மயங்கிவிடுவாரா என்ன யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்து ரசிகர் வாயை அடைத்ததோடு மட்டுமல்லாது, மொத்த ஓவியா ஆர்மியையும் குஷியாக்கியுள்ளார். எனக்கு ஆர்மி இருக்கு என ஓவியா போட்ட பதில் ட்வீட்டை பார்த்த ஆர்மி, செம்ம குஷியாகி அதை ட்ரெண்ட் செய்து வருகிறது.