சிம்பு என்றாலே வம்பு எனும் அளவிற்கு திரையுலகிலும் சரி, பர்சனல் லைப்பிலும் சரி பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார். கால்சீட் பிரச்னை, ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என சினிமாவில் சிம்பு பண்ணாத பிரச்சனைகளே கிடையாது. அதேபோல காதல் விவகாரத்திலும் "காதல் தோல்வியை பார்த்தவன்டா நானு, பர்ஸ்ட் லவ்வில தோத்தவன்டா நானு" என பல காதல் தோல்விகளை பார்த்துவிட்டார். 

இதையும் படிங்க: ஒருவழியாக ரிலீஸ் ஆனது "எனை நோக்கி பாயும் தோட்டா"... ஆனந்த கண்ணீரில் கெளதம் மேனன்... தியேட்டர்களை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்...!

காதல் மன்னனாக வலம் வந்தது போதும், இனி எதுவுமே வேண்டாம் என ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளார் லிட்டில் சூப்பர் ஸ்டார். எதுவுமே வேண்டாம் என்னை விடுங்க என மலையேற முடிவெடுத்த சிம்புவை, ஒரு புதிய பிரச்சனை கொக்கி போட்டு இழுத்துள்ளது. அதுவேற யாரும் இல்ல, நம்ம கொழு, கொழு நடிகை ஹன்சிகா தான். "வாலு" பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாகவும், ஹன்சிகாவிற்காக சிம்பு வீடு கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த காதலாவது நம்ம தலைவனுக்கு நிலைக்கட்டும் என ரசிகர்கள் மனதிற்குள் வேண்டிக்கொண்டிருந்த சமயத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: அங்கமட்டும் வரமாட்டேன்... தொடர்ந்து அடம்பிடிக்கும் நயன்தாரா... "மூக்குத்தி அம்மன்" நியூ அப்டேட்...!

சரி சிம்புவிற்கு லவ் எல்லாம் செட் ஆகாது, ஸ்ரைட்டா கல்யாணம் தான் என முடிவு செய்த டி.ராஜேந்தர் தீவிரமாக பெண் தேடிவருவதாக தகவல் அடிபடுகிறது. இந்த சமயத்தில் தற்போது ஹன்சிகா நடித்து வரும் "மஹா" படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபடியும் இணைந்து நடிக்கும் போது இருவருக்குள்ளும் விட்டுப்போன காதல், மீண்டும் துளிர்க்க வாய்ப்பு இருக்கலாம் என சிம்பு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.