Asianet News TamilAsianet News Tamil

மினி விமர்சனம் ‘ஒரு அடார் லவ்’...’இப்பிடி ஒரு பலான பள்ளிக்கூடம் எங்க இருக்கு ராஜா?’...


கடலை போட ஒரு பொண்ணு வேணும் சார் என்று அலைபாய்கிற ப்ளஸ் டூ பயபுள்ளைகளின் காதல், மோதல், க்ளைமாக்ஸில் சிம்பதி ஏற்படுத்துவதற்காக சாதல் என்கிற பழைய ஃபார்முலா படம்தான் ஒரு அடார் லவ். ஒரு உதார் லவ் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் மெத்தப்பொருத்தமாக இருந்திருக்கும்.

oru adar love movie review
Author
Chennai, First Published Feb 15, 2019, 5:06 PM IST

கடலை போட ஒரு பொண்ணு வேணும் சார் என்று அலைபாய்கிற ப்ளஸ் டூ பயபுள்ளைகளின் காதல், மோதல், க்ளைமாக்ஸில் சிம்பதி ஏற்படுத்துவதற்காக சாதல் என்கிற பழைய ஃபார்முலா படம்தான் ஒரு அடார் லவ். ஒரு உதார் லவ் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் மெத்தப்பொருத்தமாக இருந்திருக்கும்.oru adar love movie review

ஃப்ரெஷர்ஸ் பள்ளியில் சேரும் முதல்நாளில் துவங்குகிறது கதை. கண்ணழகி என்று உலகம் இதுவரை நம்பி ஏமாந்து வந்த ப்ரியா வாரியரும், ரோஷனும் கண்டதும் காதல் கொள்கிறார்கள். ரெண்டாவது காட்சியில் கட்டிப்பிடித்து, மூன்றாவது காட்சியில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து கிஸ் அடித்துக்கொள்கிறார்கள். இப்படி ஒரு பலான பள்ளிக்கூடம் எங்க ராஜா இருக்கு என்று கதறும்படி இன்னும் பல காதல் நாசவேலைகள் நடந்துகொண்டிருக்க ஒரு சின்ன மனஸ்தாபத்தில் பிரியாவும் ரோஷனும் ரோசத்துடன் பிரிகிறார்கள்.oru adar love movie review

நண்பர்கள் சும்மா இருப்பார்களா? இன்னொரு பொண்ணை லவ் பண்ணுற மாதிரி நடி. அவ தன்னால உன்னைத்தேடி வருவா என்று உசுப்பேற்றி நண்பியாகப் பழகிக் கொண்டிருந்த நூரின் ஷெரிஃபைக் கோர்த்துவிடுகிறார்கள். மனித மனம் ஒரு குரங்கு அல்லவா? பிரியாவை விட ரோஷனுக்கு நூரினை அதிகம் பிடித்து விடுகிறது. இருவரும் தீவிரமாகக் காதலிக்கத்துவங்க, நண்பர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரியா திரும்பி வர, அப்புறம் யார் என்ன ஆனார்கள் என்பதுதான் கதையில் கொஞ்சம் கூட அடர்த்தியே இல்லாத  ’ஒரு அடார் லவ்’.oru adar love movie review

இயக்குநரின் ரசனையை என்னவென்று சொல்ல...நாயகன் ரோஷனும், பிரியா வாரியரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சில்தான் இருக்கிறார்கள். ஒரு கண் சிமிட்டலைச் சரியாகக் கட் பண்ணிப் போட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் மோசடி செய்திருப்பதை என்னவென்று சொல்ல?...ஆனால் இரண்டாவது நாயகியாக வரும் நூரின் ஷெரிஃப் பார்ப்பவர் மனதை கன்னாபின்னாவென்று கொள்ளை அடிக்கிறார். படம் பார்த்தபின்னர் ஒரு பத்தாயிரம் பேராவது அவருக்காக வழிந்து வழிந்து கவிதை எழுதுவார்கள் என்று நிச்சயமாக நம்பலாம். மி டு.

அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மாணவி, தன்னிடம்  காதலைச் சொல்லும் பையனிடம் “ஐம் நாட் அ வெர்ஜின்..!” என்பது தொடர்ந்து கல்சுரல் ஷாக்காக ரொம்பப் பழசாக நிறைய முயன்றிருக்கிறார் இயக்குநர் ஒமர் லுலு.

காதலிக்க யாரும் கிடைக்காமல் போனதால் ‘சயின்ஸ் டீச்சரை’யே காதலிக்கும் அந்தப் பொடியன் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். “சயின்ஸ்ல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்கிறமாதிரி சந்தேகம் கேட்டுட்டு ஏண்டா பெயில் ஆனே..?” என்று டீச்சர் கேட்க, “அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தும் நான் பெயில் ஆனா, நீங்க ‘எதுவுமே சரியா சொல்லிக் கொடுக்கலை’ன்னுதானே அர்த்தம்..?” என்கிறான் அவன். டீச்சரை மாணவன் லவ் பண்ணினால் எப்போதும் ரசிக்கலாம் என்கிறது ஜனம்.oru adar love movie review

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால் பின்னணி இசையில் பார்டர் மார்க் கூட எடுக்கமுடியாமல் தடுமாறுகிறார். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு ஓகே..!

முதல் பாதியில் உருப்படியான காட்சிகளே இல்லாமல் ஒப்பேற்றி, இரண்டாவது பாதியில் கொஞ்சம் கதை சொல்லத்துவங்கும் இயக்குநர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதைக்குக் கொஞ்சம் பொருத்தமில்லாத ஒரு ட்விஸ்ட் அடித்திருக்கிறார். ‘லவ் பண்ணுனா நாசமாப்போவீங்க’ என்பது போலச் சொல்ல முயலும் அதைக் காண சகிக்கவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios