மூன்றாவது சீஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியினை இம்முறை தூக்கி உயரத்தில் நிறுத்தியே ஆகவேண்டும் என்கிற திட்டத்துடம் விஜய் டிவி அடிக்கிற விளம்பர கொட்டங்கள் நாளுக்கு நாள் எல்லை மீரிப்போய்க் கொண்டிருக்கின்றன.அநேகமாக டைட்டில் வின்னராக வரக்கூடும் என்று சொல்லப்படும் கவின் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொலைக்காட்சித் தொடரான ‘சரவணன் மீனாட்சி’தொடரைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடி அதில் பணியாற்றிய 40 குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர் என்று அத்தொடரின் இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஏறத்தாழ க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டது. நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்தபோதே இம்முறை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிக போலீஸ் புகார்களில் சம்பந்தப்படுத்தப்பட்டனர். காதல், காமக் கதைகள் வழக்கத்தை விட கொஞ்சம் ஓவர் டோஸாக வழங்கப்பட்டன. மதுமிதாவின் தற்கொலை நாடகத்தின் பல புதிர்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன. அவர் லேட்டஸ்டாக அளித்த பேட்டியில் தன்னை கேங் ரேகிங் செய்தார்கள் என்று பகீர் கிளப்பியிருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கனவே பல பெரும் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் கவினை இன்னும் சிக்கலில் மாட்டிவிடும் விதமாக  `சரவணன் மீனாட்சி’ தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த போது, தீடீரென்று அந்த தொடர் நிறுத்தப் பட்டதற்கான காரணத்தை மனம் குமுறி வெளியிட்டிருக்கிறார் அந்த சீரியலின் இயக்குநர் பிரவீன். நேர்காணல் ஒன்றில் இதுகுறித்துப் பேசிய பிரவீன்,     `சரவணன் மீனாட்சி’ சீரியலை அப்போதைக்கு முடிக்கும் எண்ணத்தில் எங்கள் குழு இல்லை. ஆனாலும், அப்படி நன்றாக போய் கொண்டிருந்த தொடரை அவசர அவசரமாக முடிப்பதற்கு காரணமே கவின் தான். நாங்கள் எவ்வளவோ அவரிடம் கெஞ்சியும் அவர் கேட்கவில்லை . அந்த சீரியலை நம்பி 40 குடும்பங்கள் இருப்பதாகவும் அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. 40 குடும்பங்கள் பிழைப்பதைப் பார்த்தால், நான் வாழ்க்கையில் முன்னேற முடியாது. 40 குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் என்று யோசித்தால், என்னால் என் வாழ்வின் அடுத்த நிலைக்குப் போக முடியாது என்று கொடூரமாக நடந்துகொண்டார் கவின் என்று பேசியுள்ளார்.

விளம்பர வெறியில் அடுத்த மூன்று வாரங்களுக்கு இன்னும் இதுபோல் எத்தனை அதிர்ச்சிகள் அளிக்கக் காத்திருக்கிறதோ பிக்பாஸ் டீம்?