Asianet News Tamil

விஜய் பிறந்தநாளில் வெறித்தனம் காட்டும் அஜித் ஃபேன்ஸ்... டாப் ட்ரெண்டிங்கில் #NonPareilThalaAJITH...!

விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரை வாழ்த்தி ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் #HBDTHALPATHYVijay  என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

on Thalapathy Vijay Birthday Thala Ajith Hastag First in Twitter Trending
Author
Chennai, First Published Jun 22, 2020, 2:21 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவரது ரசிகர்களும் சோசியல் மீடியாவில் எலியும், பூனையுமாக சண்டையிட்டு வருகின்றனர். தன்னம்பிக்கையால் உயர்ந்த அஜித்தும், என்ன தான் வாரிசாக இருந்தாலும் பல சவால்களை கடந்து கடின உழைப்பால் வென்ற விஜய்யும் எப்போதும்  கோலிவுட்டுக்கு கிடைத்த ஈடு இணையில்லாத பொக்கிஷங்கள் தான். தல, தளபதி இருவரும் என்ன தான் நண்பர்களாக பழகி வந்தாலும் அவர்களது ரசிகர்களின் அலப்பறைகள் தான் கொஞ்சம் ஓவராக சென்று கொண்டிருக்கிறது. மற்ற திரை நட்சத்திரங்கள் எல்லாம் வந்து பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு ட்விட்டரில் கட்டி உருளுகின்றனர். 

 

இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... செய்தியைக் கேட்ட மறுகணமே தெறித்து ஓடிய சாய்பல்லவி பட ஹீரோ...!

சமீபத்தில் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொரோனா பிரச்சனையால் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்டார். இதையடுத்து #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தல ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். எப்போதும் முட்டிக்கொள்ளும் விஜய் ரசிகர்கள் கூட திடீர் என ஒற்றுமையாய் மாறி, #NanbarAjith  என்ற ஹேஷ்டேக் மூலம்அஜித்துக்கு  தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். 

 

இதையும் படிங்க:  மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

ஏதோ மூன்றாம் உலகப்போரே முடிவுக்கு வந்தது போல் தல - தளபதி ரசிகர்களின் ஒற்றுமையை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை. #VijayTheFaceOfKollywood  என்ற ஹேஷ்டேக்கை அஜித் பிறந்தநாளான்று உருவாக்கிய விஜய் ரசிகர்கள் அதை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக விஜய் பிறந்தநாளான இன்று அஜித் ரசிகர்கள் ட்விட்டரை கதறடித்துக் கொண்டிருக்கின்றனர். 

 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!

விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரை வாழ்த்தி ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் #HBDTHALPATHYVijay  என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நேற்று முதல் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த இந்த ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் அசால்டாக 4வது இடத்திற்கு தள்ளிவிட்டனர். அதே சமயம் #NonPareilThalaAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஹேஷ்டேகிற்கு என்று ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் செய்த அதே சேட்டையை அஜித் ரசிகர்கள் தற்போது கையில் எடுத்து தாறுமாறு வைரலாக்கி வருகின்றனர். வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர் என்பதை நெட்டிசன்கள் இதன் மூலம் புரிந்துகொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios