இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளை கணக்கில் கொண்டு சில தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை தொடர்ந்து நடந்த தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்சனையால் திரையுலகம் சந்தித்து வரும் பாதிப்புகள் மளமளவென அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் முற்றிலும் முடங்கியுள்ள திரைத்துறையை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் குவிந்து வருகிறது. 

பல்லாயிரக்கணக்கான பெப்சி தொழிலாளர்களின் நலனை காக்கும் நோக்கில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தெலுங்கு திரையுலகினர் வைத்த கோரிக்கையை ஏற்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் படப்பிடிப்புகளை நடத்த இருமாநில முதலமைச்சர்களும் அனுமதி அளித்துள்ளனர். ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த நேரத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

தெலுங்கில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பந்த்லா கணேஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும்  பந்த்லா கணேஷ் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பந்த்லா கணேஷ் யாரை எல்லாம் சந்தித்தார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!

இதனிடையே பந்த்லா கணேஷ் வீட்டின்  அருகே வசித்து வந்த தெலுங்கு நடிகர் நாக சவுரியா வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாறியுள்ளார். இளம் நடிகரான நாக சவுரியா சாய்பல்லவி நடித்த கரு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதன் முறையாக டோலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டதை தொடர்ந்து சீனியர் நடிகர்கள் பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனராம்.