பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, சமீபத்தில் வெளிவந்த 'பலே வெள்ளையத்தேவா, படத்தில் அறிமுகமானார், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து தான்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிகின்றது.

தற்போது அருள்நிதியுடன் பிரித்தவனம் படத்தின் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் தான்யா வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்து வருகிறதாம் , அதற்கு காரணம் இவர் படங்களில் நடிப்பதுதான் என கூறப்படுகிறது .

அந்த காலத்திலேயே சினிமாவில் கதாநாயகிகள் படும் கஷ்டத்தை பார்த்த அவருடைய தாத்தா ரவிச்சந்திரன் . நம்ப குடுப்பதில் இருந்து பெண்கள் யாரும் நடிப்பின் பக்கமே போக கூடாது என்று கூறி இருந்தாராம் .

அவர் பேச்சை மீறி தான்யா தற்போது படங்களில் நடித்து வருவதால் குடுப்பதில் விரிசல் என கூறப்படுகிறது . இதன் காரணமாக படப்பிடிப்பில் அப்சட்டாகவே காணப்படுகிறாராம் இவர்.