Asianet News TamilAsianet News Tamil

14 வருஷம் ஆச்சு…. இனி ஒன்னும் செய்ய முடியாது…. கைவிரித்த வழக்கறிஞர்கள் !! கவலையில் சின்மயி !!

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ள பாடகி சின்மயி. அவர் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார். ஆனால் இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும், ஆதாரம் ஏதும் இல்லாததாலும் வைரமுத்து மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என வழக்கறிஞர்கள் கைவிரித்துவிட்டனர்.

No way to take action against vairamuthu
Author
Chennai, First Published Oct 16, 2018, 10:21 PM IST

பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தற்போது அவர்கள் மீ டூ என்ற மூவ்மெண்ட் மூலம் வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

No way to take action against vairamuthu

தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். மேலும் இது குறித்து வட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

No way to take action against vairamuthu

இதற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து, தானும் ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை ஆண்டுகளாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No way to take action against vairamuthu

இதனிடையே , பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்கறிஞர்களுடன் சின்மயி ஆலோசனை நடத்தியதாகவும்,  ஆனால், ஆதாரம் இல்லாமல், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது என அவர்கள் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இன்னும் சிறிது நாட்களில் வைரமுத்து – சின்மயி பிரச்சனை காணாமல் போகும் என்றும் பொதுவாக கருத்து நிலவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios