வரும் 20-ஆம் தேதி நடைப்பெற உள்ள மெர்சல் ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனராம்.

இந்தப் படத்தில் நடித்துள்ள விஜய் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. அதோடு இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸுக்கு மெர்சல் படம் 100-வது தயாரிப்பு.

இப்படி பல அம்சங்கள் உள்ளதால் இப்பட ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

‘மெர்சல்’ படமும் அரசியல் பின்னனி கொண்டு உருவாவதாக தெரிகிறது. இதனால் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா அரசியல் மேடையைப் போல அமைக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் உள்ள அனைத்து பாடலையும் விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான் பாடுவார்.

மெர்சல் ஆடியோ ரிலீஸ் விழாவை நேரலையாக ஒளிபரப்ப அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.