nivetha thamas plastic surgery issue

நடிகைகள் தங்களின் அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள, தங்களின் முகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

ஏற்கெனவே... ஸ்ருதிஹாசன், சமந்தா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராய், கஜோல் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ் என்கிறார்கள்.

இவர் தமிழில் 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும், 'ஜில்லா' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வித்தியாசமாக உள்ளதால் பலர் இவர் முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். ஆனால் நிவேதா தாமஸ் தரப்பில் இருந்து இந்தப் புகைப்படத்தில் மேக்கப் இல்லாததால் அப்படி தெரிகிறது என கூறியுள்ளனர்.