நிகில் சித்தார்த்தா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் மற்றும் ஸ்ரீசரண் பகாலா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார். சரண் தேஜ் உப்பலபதி இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். 

காவல்துறை சார்பில் நடந்த போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தமிழ் மொழிக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் பிரம்மாண்டமான காட்சிகளும், அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்! லால் சலாம் மற்றும் 170-வது படத்திற்கு சேர்த்து எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ஜூன் 29ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
SPY Trailer (Tamil) | Nikhil Siddharth | Garry BH | Charantej Uppalapati | Ishwarya Menon