கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகையே நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். கொரோனா தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் கவலை அடையச் செய்துள்ளன. 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகின் வல்லரசு நாடுகள் கூட சமூக விலகல் ஒன்றே சரியான வழி என்று அறிவுறுத்தி வருகின்றன. அப்படித் தான் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் போலவே திருமணம், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட வேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தனது வீட்டில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியாவின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே என்பவர் தனது கணவரின் பிறந்தநாளை வீட்டில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

உறவினர்கள், நண்பர்கள் சூழ சரக்கு, ஆட்டம், பாட்டம் என்று செமையாக என்ஜாய் செய்த  அந்த நடிகை, அவரது கொண்டாட்டத்தை வீடியோவாக எடுத்து அதை சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து கடுப்பான போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று நடிகையை கைது செய்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதால் இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.