ரூ.50 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமாண்ட பங்களாவை தனது காதலியான 36 வயது நடிகைக்கு 26 வயதே ஆன பாடகர் பரிசளிக்க உள்ளார். தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகி பட்டம் வென்று தமிழில் அறிமுகமாகி பின்னர் இந்தியில் வெற்றிக் கொடி நாட்டியவர் இவர். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

 

36 வயதான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் தங்கியிருந்த போது 26 வயதே ஆன நிக் ஜோனாஸ் எனும் பாடகருடன் அறிமுகம் ஏற்பட்டது. நண்பர்களாக இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலர்கள் ஆகினர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகிறது. 

திருமண பரிசாக பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாசுக்கு எதை வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நிக் ஜோனாஸ் தனது காதல் மனைவிக்கு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை பரிசாக அளிக்க உள்ளார். அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் தான் திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ராவும் – நிக் ஜோனாசும் குடியேற உள்ளனர். 

இதனை முன்னிட்டு அந்த வீட்டை விலைக்கு வாங்கியுள்ள நிக் ஜோனாஸ் அதனை பிரியங்கா பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 26 வயதே ஆன நிலையில் தனது 36 வயது காதலிக்கு நிக் ஜோனாஸ் 50 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட பங்களாக வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.