next president is rajinikanth
குடியரசுத் தலைவர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக டெல்லி பாஜக வட்டாரத்தில் தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிகிறது. அந்த பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன.

இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகாவத்தை நிறுத்தலாம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனால் மோகன் பகாவத் தனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை என கூறி இந்தப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இதே போன்று அத்வானியும் தனக்கு வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரஜினிகாந்த்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழகத்தில் வலுவாக காலுன்றலாம் என்றும், அவரின் ரசிகர்கள் மத்திய அரசினை ஆதரிப்பார்கள் என்றும் பாஜக நினைப்பதாகவும் பேசப்படுகிறது.
மேலும், ரஜினியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்று பாஜக தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது,
இப்படி ஒரு வதந்தி டெல்லி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக றெக்கை கட்டிப் பறக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் ஒரு ஜனாதிபதி !!!
