- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
தொகுப்பாளர் ஆதவனுக்கும், சீரியல் நடிகை விலாசினிக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுபற்றி விலாசினியே விளக்கம் அளித்திருக்கிறார்.

Vilasini Clarification about 2nd Marriage With Aadhavan
ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான கொஞ்சம் நடிங்க பாஸ் என்கிற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ஆதவன். இவர் ஒரு மிமிக்ரி கலைஞராகவும் தன்னுடைய திறமையை பல்வேறு நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வந்தார் ஆதவன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், விஜய்யை விமர்சித்து பேசி, விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.
புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குழலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விலாசினி. இவர் ஒரு டப்பிங் கலைஞர். அதுமட்டுமின்றி பாடல் பாடுவதிலும் கில்லாடியாக இருந்து வருகிறார் விலாசினி. இசைஞானை இளையராஜாவின் உறவுக்கார பெண் தான் இந்த விலாசினி. இவருக்கும், நடிகர் ஆதவனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின. இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான புகைப்படம் தான்.
ஆதவனுடன் 2வது திருமணமா?
விலாசினி தன்னுடைய கையில் குழந்தையுடன் ஆதவனோடு ஜோடியாக போஸ் கொடுத்திருந்தார். அவர்கள் இருவரும் தங்களின் குழந்தையுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது எனக்குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வந்தனர். இதைப்பார்த்த பலரும், இவங்க ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு, அது இவங்களுக்கு பிறந்த குழந்தையா என கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
விளக்கம் அளித்த விலாசினி
இந்த விவகாரம் சற்று பூதாகரமாக வெடித்த நிலையில், விலாசினியே அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். விலாசினி தற்போது வாகை சூடவா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். அதை தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்த, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்திருக்கிறார். அந்த நேரலையில் ஏராளமானோர் உங்களுக்கு ஆதவன் உடன் இரண்டாவது திருமணம் ஆகிடுச்சா என கேள்வி கேட்டனர். அதற்கு நடிகை விலாசினி தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என கூறி இருக்கிறார்.
விலாசினி 2வது திருமணம் எப்போது?
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், விலாசினி சட்டப்படி விவாகரத்து வாங்கி தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டார். ஆனால் ஆதவனுக்கு இன்னும் டைவர்ஸ் கிடைக்கவில்லை. அவருடைய விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடக்கிறது. அவருக்கு விவாகரத்து கிடைத்த பின்னரே இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய இரண்டாவது திருமணம் பற்றி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

