New information emerged in Sridevis death Drowning in water

துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிந்தார். 

அப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

ஸ்ரீ தேவியின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களான ரஜினி கமல் மற்றும் மேலும் பல நட்சத்திரங்கள் இறுதி சடங்கில் பங்கேற்பார்கள் என தெரிய வந்துள்ளது.

இதன் இடையே,ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில், இறுதி சடங்கிற்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், துபாயில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என தடவியல் அறிக்கையில் கூறியிருப்பதாக கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.