விஜய் டிவி பிரபலம் புகழின் தந்தை காலமானார். புத்தாண்டுக்கு முன்னதாக நடந்த இந்த சோக சம்பவத்தால் புகழின் குடும்பம் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் புகழ். இவர் சிரிச்சா போச்சு என்னும் ஒரு காமெடி ஷோவில் வடிவேலு பாலாஜியின் மூலம் என்ட்ரி கொடுத்தார் . பின்பு புகழின் நடிப்பு திறமையை பார்த்து விஜய் டிவியில் ஒரு காமெடி சமையல் போட்டியான குக் வித் கோமாளி மூலம் தனது திறமையை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினர்.தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார்.
குக் வித் கோமாளி சீசன் 2ல் கலக்கிய புகழுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது தனி திறமையால் மட்டுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார் புகழை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 1947, யானை , அயோத்தி படங்களில் நடித்து வந்தார்.
2022 ஆம் ஆண்டு நீண்ட நாளாக காதலித்து பென்சி ரியா இன்னும் பெண்ணை மணந்து கொண்டார் அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குழந்தையின் பெயர் ரிதன்யா. உலக சாதனையும் படத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த ஆறு மாதத்திலேயே உலக சாதனையை படைத்தார் ரிதன்யா.
அப்பாவின் பாசம்:
புகழ் பல மேடைகளில் எனக்கு என் குடும்பத்தார் மட்டுமே சப்போட்டாக இருந்தனர் என் அப்பா எனக்கு மிகவும் அறிவுரையும் உற்சாகத்தையும் கொடுத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார் எனக்கு அவர் மட்டுமே உறுதுணையாக இருப்பார் என்று பல மேடைகளில் அவர் கூறி இருக்கிறார் தற்போது அவருக்கு அப்பாவின் இறந்த சோகம் அவரை மிகுதியாக தாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இணையத்தில் போடப்பட்ட பதிவு: தனது அப்பா நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டதை குறித்து இணையத்தில் பதிவிட்டால் புகழ் என்கிட்ட சொல்லாமலேயே போயிட்டியேப்பா என்று மனம் உருகி கூறியுள்ளார் புகழ்
