'இதுவும் கடந்து போகும்' பாடல் ரிலீஸ் எப்போது? நயன் காதலர் விக்கி கொடுத்த சூப்பர் ஆப்டேட்..!
நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இருந்து வெளியாக உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'இதுவம் கடந்து போகும்' பாடல் ரிலீஸ் தேதியை விக்னேஷ் சிவன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இருந்து வெளியாக உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'இதுவம் கடந்து போகும்' பாடல் ரிலீஸ் தேதியை விக்னேஷ் சிவன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: நடிகர் தனுஷின் 'தி கிரே மேன்' ஷூட்டிங் நிறைவடைந்தது..!
தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தை... அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், சில மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த தகவலை ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில். ’இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த பாடல் எப்போது வெளியாகிறது என்கிற தகவலை சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்:ரோஜா சீரியலில் ஷாமிலிக்கு பதில் இவர் தான் வில்லி... வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
அதன்பாடு நாளை ஜூன் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக பார்க்கப்பட்ட நிலையில், இந்த பாடலுக்கும் அதே விதமான எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.