நடிகர் தனுஷின் 'தி கிரே மேன்' ஷூட்டிங் நிறைவடைந்தது..!
பிப்ரவரி மாதத்தில் இருந்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஹாலிவுட் திரைப்பட ஷூட்டிங்கான 'தி கிரே மேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் படி, பாலிவுட், ஹாலிவுட் என அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார் தனுஷ். இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஹாலிவுட் திரைப்பட ஷூட்டிங்கான 'தி கிரே மேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார், மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெறுகிறார். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, கொரோனா இரண்டாவது அலை தலை தூக்குவதற்கு முன்னரே, கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா பறந்தார். கர்ணன் படத்தை கூட தனுஷ் அமெரிக்காவின் தான் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பார்த்து ரசித்தார். இந்நிலையில், சுமார் 4 மாதங்களாக இந்த படத்தில் தனுஷ் நடித்துவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் எப்போது சென்னை திரும்புவார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அதே நேரத்தில் தனுஷின் மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜிகாந்த்... முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தனுஷ் ரஜினிகாந்த் அவர்கள் உடல் பரிசோதனை முடிந்த பின்பு சென்னை திரும்புவாரா..? அல்லது அதற்க்கு முன்னரே வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.