தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு, ஒரு பக்கம் கோட் பட அப்டேட்டை வெளியிட்டுள்ள நடிகர் விஜய்யை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய பின்னர் சமூகத்தில் நிகழும் முக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் 49 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து முதலில் எக்ஸ் தளம் வாயிலாக கருத்து தெரிவித்த விஜய், திமுக அரசின் அலட்சியம் தான் இத்தகையை பெரும் துயரத்திற்கு காரணம் என கடுமையாக சாடினார்.

அதுமட்டுமின்றி நேற்று மாலை கள்ளக்குறிச்சி விரைந்த விஜய், அங்கு விஷச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்ததோடு அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதரவும் தன கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி இருக்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்... VIJAY : எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு நடிகர் விஜய் திடீர் உத்தரவு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மிகவும் அப்செட்டான விஜய், இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். விஜய்யின் உத்தரவை அடுத்து அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விஜய் ரசிகர்கள் கைவிட்டுள்ளனர்.

இப்படி பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என சொல்லிவிட்டு மறுபுறம் தான் நடித்துள்ள கோட் படத்தின் அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அந்த அப்டேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விஜய்யின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி மீம் போட்டு வருகின்றனர். நேத்து சோகமா ஸீன் எல்லாம் போட்டு.. 24 மணி நேரம் கூட ஆகலேயே.. எல்லாமே புரமோஷனுக்கு தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யை ட்ரோல் செய்து போடப்படும் மீம்ஸ் எக்ஸ் தளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... The GOAT : என்ன நண்பா ரெடியா... விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த கோட் பட அப்டேட் - குஷியில் ரசிகர்கள்