மிஷ்கின் இயக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞராக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "சைக்கோ" திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. நித்யா மேனன், அதிதி ராவ், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருத்த சைக்கோ படம் தியேட்டர்களில் மரண பீதியில் சீட் நுனியில் உட்கார வைத்தது. 

தங்களது துறையில் சிறந்து விளங்கும் பெண்களை கடத்தும் சைக்கோ கொலைகாரன், அவர்களது தலையை வெட்டி, உடலை மட்டும் பொது இடங்களில் வைத்துவிட்டு செல்கிறான். அப்படிப்பட்ட கொடூர சைக்கோ கொலைகாரனை பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இவ்வளவு பெரிய கேஸை விசாரிக்கும் போலீஸ், ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமராவை செக் செய்யாதது ஏன் என நெட்டிசன்கள் மரண கலாய், கலாய்த்து வந்தனர்.

இதையும் படிங்க: நடிகை குஷ்புவின் மகளா இது?.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...!

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாட்ஸ் அப் மெசெஜ் அதிமுக தொண்டர்களை கடுப்பாக்கியுள்ளது. அதில், "சைக்கோ" படத்தில் ஏன் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்த காலம், கோடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் மிஷ்கின் ஆர்மி சார்பாக சொல்ல விரும்பும் பதில் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சு... மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?... மரண பங்கம் செய்யும் தல ஃபேன்ஸ்...!

உதயநிதியின் இந்த பதிவால் பொங்கி எழுந்த அதிமுக தொண்டர்களும், எப்படா வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த ரஜினி ரசிகர்களும் தங்களது வேலையை காட்டியுள்ளனர். நீங்க எல்லாம் சிசிடிவி பற்றி பேசலாமா?... அது இருந்ததால் தானே பிரியாணி கடை ஊழியர், பியூட்டி பார்லர் லேடி என எல்லார் கூடயும் பாக்ஸிங் போட்டது வெளிய வந்திருக்கு என மரண பங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.