பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 

அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. 

மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4-ல் இத்தனை ஹீரோயின்களா?....சோசியல் மீடியா குயின்களுக்கு தூண்டில் போடும் தொலைக்காட்சி...!


3 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் எனக்கு இருப்பது போன்ற புகழ் பல பிரபல நடிகைகளுக்கே கிடையாது. எல்லோரும் என்ன பார்த்து பொறாமைபடுறாங்க. என் போட்டோ ஷூட்டை பார்த்து நிறைய கோலிவுட் பிரபலங்கள் காப்பியடிக்கிறாங்க என்று விளம்பரம் தேடுவதற்காக சகட்டு மேனிக்கு எதையாவது பேசிவருகிறார். இதற்கிடையே சட்டை பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும் படி படுகோவலமாக போஸ் கொடுத்துள்ளார். எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் கவர்ச்சியில் எல்லை மீறி ஆட்டம் போடும் மீரா மிதுனை நெட்டிசன்கள் வழக்கம் போல சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!
அதிலும் அந்த போட்டோவிற்கு மீரா மிதுன் Hollywood என்று கேப்ஷன் கொடுத்திருப்பது பலரையும் கடுப்பேற்றி விட்டது. அந்த கேப்ஷனுக்கு என்றே விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி மீரா மிதுன் ட்விட்டரில் கமெண்ட்டில் போட்டுள்ளனர்.