இந்தியில் இதுவரை 13 சீசன்கள் வரை கடந்துள்ள நிலையில், தமிழில் 3 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.ஏனென்றால் தேர்வு செய்யப்படும் நபர்களில் பெரும்பாலானோர் அதற்கு முன்னதாக ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள், இல்லை என்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பிரச்சனையை கிளப்புவார்கள். 

இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகைகள் சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஹாட் போட்டோஸ் மூலம் சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருகிறார்களாம். 

இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழகத்தையே கதிகலங்க வைத்த சீரியல் பிரபலங்களான ஈஸ்வர், ஜெயஸ்ரீ-யிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி சின்மயி, ராதா ரவி, மீனா, டிடி, வித்யுலேகா ராமன் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.