நடிகை தீபிகா படுகோனே ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்துள்ள படம் சப்பாக். கடந்த 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த லஷ்மி அகர்வால் என்ற தைரியமான பெண்ணின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தார். 

மற்ற நடிகைகள் தயங்கிய ஒரு கேரக்டரை துணிச்சலாக கையாண்டு அதில் வெற்றியும் கண்ட தீபிகா படுகோனை சிங்க பெண்ணே என ரசிகர்கள் அழைத்து வந்தனர். அப்படி தலைமேல் வைத்து கொண்டாடிய திரைத்துறையினரும், ரசிகர்களும் ட்விட்டரில் கழுவி,கழுவி ஊத்தும் அளவிற்கு தீபிகா படுகோன் அறிவித்த சவால் ஒன்று வினையாக முடிந்துள்ளது. 

இதையும் படிங்க: "சப்பாக்" புரோமோஷனுக்காக அதிரடி ஸ்ட்ரிங் ஆபரேஷனில் குதித்த தீபிகா படுகோனே... ஆசிட் விற்பனை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!

சப்பாக் படத்தின் புரோமோஷனுக்காக விதவிதமான செயல்களில் ஈடுபட்டு வரும் தீபிகா, சமீபத்தில் ஆசிட் விற்பனை குறித்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஓம் சாந்தி ஓம், பிகு, சப்பாக் படங்களில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் போன்று மேக்கப் போட்டு, டிக்டாக் வீடியோ வெளியிடும் படி சவால் ஒன்றை அறிவித்தார். 

ஆசிட் வீச்சால் முகம் வெந்து மனதளவில் முடங்கி போய் அவதிப்படும் பெண்களின் மனவலியை புரிந்து கொள்ளாமல், சாதாரண மேக்கப் போட்டுக்கொண்டு வந்து நிற்க சொல்வதை ஏற்க முடியாது என தீபிகா படுகோனிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

இப்படி ஒரு சவாலை அறிவித்ததன் மூலம் தீபிகாவின் நிஜ சாயம் வெளுத்துவிட்டதாகவும், பலருக்கு உத்வேகம் அளிக்கும் பெண்ணாக இருந்த நீங்கள், இப்படி கேவலமாக நடந்துகொண்டதை ஏற்க முடியாது என சகட்டு மேனிக்கு வசைபாடி வருகின்றனர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்ததால் தீபிகா படுகோனிற்கு குவிந்த ஆதரவுகள் அனைத்தும் ஒரே நாளில் காலாவதியாகிவிட்டது.