இந்தி சினிமாவில் இருந்து சிவா மனசுல சக்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுயா. ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. அந்த படத்தில் அனுயாவின் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நான் ஆகிய படங்களில் நடித்தார். என்ன தான் திறமை இருந்தாலும், அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரிதாக ஓடாததால் தமிழ் சினிமா இவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. 

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுயா, அதிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் ஆவார். வெறும் 7 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுயாவால் பெரிதாக புகழ் பெற முடியவில்லை, அதனால் பட வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படியாக கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

இதையடுத்து  பிற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அனுயா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அனுயா தந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அதனால் மிகப்பெரிய சர்ச்சை கிளப்பியுள்ளது. 

காரணம் அப்பாவுடன் இருக்கும் அனுயா கையில் ஒரு கிளாஸ் பீர் உடன் இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து, அனுயாவை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர். அப்பாவின் பக்கத்திலேயே அமர்ந்து சரக்குடன் போஸ் கொடுக்கும் அனுயாவை பார்த்து, அப்பா கூட சேர்ந்து சரக்கு அடிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.