அந்த பதிவை பார்க்க அப்படியே அர்ஜுன் கபூரின் பதிவை போன்றே இருந்தது. உடனே நெட்டிசன்கள் அர்ஜுன் கபூருக்கு கொரோனா வந்ததும், இவருக்கும் வந்துவிட்டது. நல்ல காதலன், காதலி என கிண்டல் செய்து வருகின்றனர்

கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பொருளாதார ரீதியில் அவஸ்தை படும் மக்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் மெல்ல மெல்ல பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இது போன்ற தளர்வுகளால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தை கடந்து, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. சாதாரண மக்களை தாண்டி, பல பிரபலங்களையும் பதம் பார்த்து வருகிறது கொரோனா. அந்த வகையில், ஏற்கனவே, பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா, மற்றும் மாமனார் அமிதாப் பச்சன் என ஸ்டார் குடும்பத்தையே ஆட்டி வைத்தது கொரோனா.இவர்களை தாண்டியும் பல பிரபலங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுத்து மீண்டு வந்தனர். 

இந்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்,அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார். அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருடைய காதலியான மல்லிகா அரோராவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் அவரே பதிவிட்டார். 

எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நான் நலமாக இருக்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் அறிவுரையின்படி நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்தார். அந்த பதிவை பார்க்க அப்படியே அர்ஜுன் கபூரின் பதிவை போன்றே இருந்தது. உடனே நெட்டிசன்கள் அர்ஜுன் கபூருக்கு கொரோனா வந்ததும், இவருக்கும் வந்துவிட்டது. நல்ல காதலன், காதலி என கிண்டல் செய்து வருகின்றனர்.