உலக நாயகன் கமல் ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன்பிருந்தே சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வந்தவர். சமுதாய பிரச்சனைகள் அனைத்திற்கும் ட்விட்டரில் தனது கருத்துக்களை தெரிவிப்பார். அதுவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக மாறிய பிறகு ட்விட்டரில் படு வேகமாக செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என சகலரையும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார். பாராட்டுவது என்றாலும் சரி, திட்டுவதானாலும் சரி அவருக்கு முதலில் கைகொடுப்பது ட்விட்டர் தான். அப்படி கமல் ஹாசன் போட்டுள்ள ட்வீட் ஒன்றிற்கு அர்த்தம் புரியவில்லை என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வியக்காதீர் தோழர்களே!
மனித நேயம் என்பது
விபரீத குணமுள்ளது.

வெட்டிக்கொல்லத்துணியும்
சகோதரப் போரில்-
புகுந்து தவிர்க்கும்
தாய்மையே வெல்லும்.

அத்தகைய அன்பு வேண்டாமா நமக்கு?

பாவமும் புண்ணியமும்
ஒருவரை ஒருவர்-
நாம் தின்று கொழுத்த பின்
யாமையே யாம் தினல் கேவலம்
என்று நாம் உணர்ந்த பின்
விடிந்ததால்-உதித்தது இவ்வுலகு.

நாம் கற்பித்த நாய்கட்கும்
ஒரு தனி வீரமுண்டு.
வேங்கைப்புலிக்கும் முதலைக்கும்
அது உண்டு.

அது சமீப காலத்துச் சான்றோர்
அவையில்-
மிருக உறுமலின்று
வேறென்ன தோழா?

உன்னை நான் சாடுவேன்-
என்னை நீ ஏசுவாய்.
இருப்பினும்-
அமர்ந்து நாம் உயிர்பலி
தவிர்ப்பதை
கடமையாய்க் கொண்ட
ஒரு குடும்பமன்றோ!

இதில் விடுபடும் சோதரன்
மீண்டு வருவான். அவன்-
வரும் வரை அவன்
செய்த சேதங்கள்
சீர் செய்வதென்பது-
தகப்பனாய், தோழனாய்
என் கடமையன்றோ!

மன்னித்து அருள்கவென
அவனுக்கும் முன்னால் நின்று
கேட்பதே
நம்மறிவின் உச்சம்.

பகுத்து அறிந்த பின்
பண்பிழப்பது எவ்வாறு? என ட்வீட் செய்துள்ளார். 

இதையும் படிங்க: சீயான் விக்ரம் தாத்தா ஆகப் போறாராம்?... குட் நியூஸைக் கேள்விப்பட்டு குஷியான ரசிகர்கள்...!

இதை பார்க்கும் நெட்டிசன்கள் இந்த ட்வீட்டை புரிந்து கொள்ள கோனார் உரை ஏதேனும் இருக்கிறதா? என நம்மவர் கமல் ஹாசனை கலாய்த்துள்ளனர். இதனால் பொங்கியெழுந்த ஆண்டவரின் தொண்டர்கள் சிலரும் அவர்களுக்கு தெரிந்த வரையில் அந்த ட்வீட்டிற்கு அர்த்தம் கூறியுள்ளனர். கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசம் விவகாரம் குறித்து கருத்து சொல்கிறாரா?... பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கான பதிவான என தெரியாமல் இருதரப்பும் குழம்பி போயுள்ளது.