ஒரு சீன் விடாம காப்பி அடித்து மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்! மாஸ்டர் இந்த மலையாள படத்தில் இருந்து சுடப்பட்டதா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படம் மலையாள படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷான், சிபி, மகாநதி சங்கர், பூவையார், விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தது.
இப்படத்தில் நடிகர் விஜய் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பணியாற்றும் வாத்தியாராக நடித்திருந்தார். ஆரம்பத்தில் குடியும், கும்மாளமுமாக இருக்கும் விஜய், ஒரு கட்டத்தில் அந்த பள்ளியில் இருக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பின், குடியை விட்டுவிட்டு, வாத்தி ரைடு நடத்தி, அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த முயல்வது தான் இப்படத்தின் கதை. இதில் மிரட்டல் வில்லனாக பவானி என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் இணைந்த ஜீ தமிழ்! இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்டில் அதிரடி மாற்றம்
2021-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் துவண்டு கிடந்த தியேட்டர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்ததோடு, மக்களை மீண்டும் தியேட்டருக்கு வரவைத்த படம் மாஸ்டர் தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ என்கிற திரைப்படத்தை எடுத்து முடித்து கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தார் லோகேஷ் கனகராஜ். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மலையாள படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. மாஸ்டர் படத்தின் காட்சிகளும், கடந்த 1989-ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளிவந்த முத்ரா என்கிற திரைப்படத்தின் காட்சிகளும் அச்சு அசல் ஒரே போல் இருப்பதை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அனிருத்தை போல் ஒரே பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன சாய் அபயங்கர்... இந்த பிரபலத்தின் மகனா?