MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் இணைந்த ஜீ தமிழ்! இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்டில் அதிரடி மாற்றம்

சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் இணைந்த ஜீ தமிழ்! இந்தவார டாப் 10 சீரியல் லிஸ்டில் அதிரடி மாற்றம்

டிஆர்பி ரேஸில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் சீரியலும் போட்டிக்கு வந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2024, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
serial TRP

serial TRP

சின்னத்திரை சீரியல்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு தொலைக்காட்சிகள் புத்தம் புது சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன. டிஆர்பி-யில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் சீரியல் ஒன்று டாப் 10 டிஆர்பி ரேஸில் இணைந்திருக்கிறது. அது என்ன சீரியல் என்பதையும் இந்த வார டாப் 10 டிஆர்பி பட்டியலையும் தற்போது பார்க்கலாம்.

24
Karthigai deepam serial

Karthigai deepam serial

டாப் 10 டிஆர்பி பட்டியலில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் தான் 10வது இடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 5.88 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் 6.35 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8-ம் இடம் பிடித்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி மகா சங்கமம், இந்த வாரமும் 7.63 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. 

இதையும் படியுங்கள்... தன்னிடம் வேலை பார்த்தவருக்கே தன் பொண்ணை கொடுத்த ஷங்கர்... அடுத்த அட்லீயா? யார் இந்த தருண் கார்த்திக்?

34
TOP 10 tamil serial TRP

TOP 10 tamil serial TRP

ஆலியா மானசா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 8.25 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல் விஜய் டிவியின் டிரெண்டிங் சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை, 8.73 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. கேப்ரியல்லா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல் 8.99 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

44
Singapenne serial

Singapenne serial

வழக்கம்போல் டாப் 4 இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதில் நான்காவது இடத்தை 10.39 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் இடம்பெற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 10.43 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 2ம் இடம் பிடித்துள்ள கயல் சீரியல் 10.83 டிஆர்பி புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே 11.10 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... OTTயில் அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகை தான்.. எவ்வளவு சம்பளம்? டாப் 5 நடிகைகளின் லிஸ்ட் இதோ..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சிறகடிக்க ஆசை
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved