சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கினர். ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'புத்தம் புது காலை' திரைப்படம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. ஜெயராம், ஊர்வசி, ஆண்ட்ரியா, ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சுஹாசினி, அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்திருந்தனர். 

 

இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இதேபோல் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஆந்தாலஜி படம் ஒன்று தயாரானது. ரோனி ஸ்க்ரூவலாவின் ஆஎஸ்விபி மூவிஸ் நிறுவனமும், பிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இந்த படத்தை நெட்பிளிக்ஸ் 190 நாடுகளில் வெளியிட உள்ளது. காதல், அந்தஸ்து, கவுரம் ஆகியவை உறவுகளுக்கிடையே ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த 4 அழகான கதைகள் கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியுள்ளனர். 

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா?... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...!

தற்போது பாவக்கதைகள் ஆந்தலாஜி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பைப் போலவே இந்த படத்தின் உருவாக்கத்திலும் பல வித்தியாசங்கள் உள்ளன. சிம்ரன், பிரகாஷ் ராஜ் (Prakash Raj), சாய் பல்லவி, அஞ்சலி, கௌதம் மேனன், ஷாந்தனு பாக்யராஜ், பவானி ஸ்ரீ, ஹரி, காளிதாஸ் ஜெயராம், கல்கி போன்றோர் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.