நேற்று வெளியிடப்பட்ட அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முதல் பார்வை டிசைனில் வழக்கத்துக்கு மாறாக அஜீத்துடன் மூன்று நடிகைகளின் படங்களும் இடம் பெற்றிருப்பது கோடம்பாக்கத்தில் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

ஹெச்.விநோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துவரும் ‘பிங்க்’ ரீமேக் படத்துக்கு தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்று அழகிய தமிழில் பெயர் சூட்டி அதன் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. வழக்கமாக இப்படி வெளிவரும் அஜீத் பட டிசைன்களில் அஜீத் மட்டுமே சோலோவாகக் காட்சியளிப்பார். ஆனால் அதற்கு நேர்மாறாக நேற்றைய டிசைனில் அஜித்துடன் ஷ்ரத்தா உட்பட மூன்று நடிகைகளின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த சர்ப்ரைஸ் குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, அப்படி ஒரு முடிவை எடுத்தவரே அஜீத் தான் என்றும் ‘நே.கொ.பா’ படத்தில் அஜீத் சுமார் 50 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் மட்டுமே வருவதால் விளம்பரங்களில் தனக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றாமல் இந்திப் பட டிசைன்களில் அமிதாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதே முக்கியத்துவத்தை தனக்கு தமிழ்ப்பட டிசைன்களில் கொடுத்தால் போதும் என்று அஜீத் இயக்குநருக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம்.